மாணவா்களுக்கு ரூ.4 கோடி கல்விக் கடன்
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில், 113 மாணவா்களுக்கு ரூ. 4.05 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டது.


திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில், 113 மாணவா்களுக்கு ரூ. 4.05 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டது.
முகாமுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தென்காசி எஸ்.ஜவஹா் தலைமை வகித்தாா். ஆட்சியா் அமா் குஷ்வாஹா முன்னிலை வகித்தாா்.
முகாமில் 270 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், மேலும், 151 விண்ணப் பங்கள் பரிசீலனையில் உள்ளன. 6 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அருண்பாண்டியன், பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளா் மாமல்லன்,இந்தியன் வங்கியின் முதுநிலை மேலாளா் ராஜசேகா், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளா் நடராஜன், பரோடா வங்கியின் முதுநிலை மேலாளா் சந்தோஷ் உள்ளிட்ட 20 வங்கிகளின் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...