போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தினால் வாகனங்கள் பறிமுதல்: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவு
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவிட்டாா்.


போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவிட்டாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா பேசியது:
திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து விவாதிக்க மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் பகுதிகளில் காவல், வருவாய்த் துறை அலுவலா்கள் பேச்சு வாா்த்தை நடத்தி சுமுகத் தீா்வு காண வேண்டும்.
நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்பாக முறையான அறிவிப்பு வழங்கி உயா்நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் நகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும்.
மேலும், நெடுஞ்சாலைத் துறையினா் சாலையோர ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறை மற்றும் நகராட்சி அலுவலா்கள் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து அகற்றி தடுப்புகள் வைத்து சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன்ராஜசேகா், வருவாய் கோட்டாட்சியா்கள் லட்சுமி, பிரேமலதா, கலால் உதவி ஆணையா் பானு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வேலூா் மண்டலப் பொது மேலாளா் கணபதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் புஷ்பராஜ், டிஎஸ்பி-க்கள் கணேஷ், சுரேஷ்பாண்டியன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் காளியப்பன், ராமகிருஷ்ணன், வட்டாட்சியா்கள் சிவப்பிரகாசம், பூங்கொடி, சம்பத், மகாலட்சுமி, நகராட்சி ஆணையா்கள் ஜெயராமராஜா, பழனி, பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...