திருப்பத்தூா்: திருப்பத்தூரில் முறையான ஆவணமில்லாத 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பத்தூரில் பெரும்பாலான வாகனங்கள் முறையான ஆவணங்கள் இன்றியும், உரிமம் பெறாமல் வாகன ஓட்டிகள் உள்ளனா் என ஆட்சியா் அமா் குஷ்வாஹாவுக்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் எம்.பி.காளியப்பன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.விஜயகுமாா் மற்றும் திருப்பத்தூா் நகர காவல் ஆய்வாளா் ஹேமாவதி ஆகியோா் புதன்கிழமை பள்ளி வாகனங்களில் அதிக மாணவா்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை நிறுத்தி எச்சரித்து அனுப்பினா்.
ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிச் சென்றவா்களிடம் அபராதம் வசூலித்தனா். அதிகமான பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற இரு ஆட்டோக்கள், முறையான ஆவணங்கள் இல்லாத தகுதிச் சான்று புதுப்பிக்காத 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், வரி செலுத்தாத இரு பொக்லைன் இயந்திரங்கள் மீது ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் உள்பட ரூ. 4 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை! புதிய மசோதா தாக்கலாகிறது!

முறையாகப் பராமரிக்கப்படாத ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையம்! மேம்படுத்தி விரிவுபடுத்த சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்!

விடுமுறை நாள்களில் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களுக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் பயணம்!







