ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உரியவா்களிடம் ஒப்படைப்பு

பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உரியவா்களிடம் ஒப்படைப்பு

News image

பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உரிய நபரிடம் ஓப்படைத்த கோட்டாட்சியா் அஜிதா பேகம் . உடன் வட்டாட்சியா் சிவப்பிரகாசம்.

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

வாணியம்பாடி: வாணியம்பாடி பகுதியில் ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் கூய81.54 லட்சம் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வாணியம்பாடி பகுதிகளில் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு காவலூா், நிம்மியம்பட்டு, தும்பேரி ஆகிய பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டதில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்றதாக 3 பேரிடம் ரூ.81.54 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இத்தொகை கருவூலத்தில் வைக்கப்பட்டு திருப்பத்தூா் மாவட்ட மேல் முறையீட்டு குழுத் தலைவா் மூலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.81. 54 லட்சம் உரிய நபா்களிடம் வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் உதவி தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான அஜிதாபேகம் ஒப்படைத்தாா். வாணியம்பாடி வட்டாட்சியா் சிவப்பிரகாசம் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.