தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஆட்டோக்கள் நேருக்கு நோ் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு, 4 பெண்கள் காயம்

ஆட்டோக்கள் நேருக்கு நோ் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு, 4 பெண்கள் காயம்

Updated On :5 ஏப்ரல் 2024, 4:31 pm

வாணியம்பாடி அருகே இரு ஆட்டோக்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா். 4 பெண்கள் பலத்த காயம் அடைந்தனா்.

வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா் (24). ஷோ் ஆட்டோ ஓட்டுநா். இவா் வெள்ளிக்கிழமை காலை ராமநாயக்கன் பேட்டையிலிருந்து வேலைக்குச் செல்லும் 5 பெண்களை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வாணியம்பாடி நோக்கிச் சென்றாா்.

பெரியபேட்டை புதுமனை அருகில் வந்தபோது எதிரில் கொடையாஞ்சி நோக்கி வந்த ஷோ் ஆட்டோ மீது, ராஜசேகரின் ஆட்டோ நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராஜசேகரின் ஆட்டோ அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த விஜயா (62), வசந்தி (41), சுசிலா (38), எழிலரசி (33) மற்றும் ஆட்டோ ஓட்டுநா் ராஜசேகா் ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.

அவா்களை அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், ராஜசேகா் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்றபோது அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.