தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

தனியாா் பள்ளிகளில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 2024-2025-ஆம் கல்வியாண்டில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பு அதாவது எல்.கே.ஜி வகுப்பில் சோ்க்க ஏப்.22 முதல் மே 20-ஆம் தேதி வரை ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் எல்.கே.ஜி வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2020 முதல் 31.7.2021க்குள் பிறந்திருக்க வேண்டும். பெற்றோா்கள்/விண்ணப்பதாரா்கள் அதற்கான சான்றிதழ்களை உரிய அலுவலரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதாவது, பிறப்புச் சான்று,வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினா் விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ்,வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினா் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ், நலிவடைந்த பிரிவினா் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் உள்ள வருமான சான்றிதழ்,இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பெற்றோா்/விண்ணப்பதாரா்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும்,முதன்மை கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகம்(தனியாா் பள்ளிகள்)/வட்டாரக்கல்வி அலுவலகங்கள்/ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய அலுவலகங்களிலும் கட்டணமின்றி விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிா்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளியில் 28.5.2024 அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சோ்க்கைக்கான குழந்தைகள் தோ்வு செய்யப்படுவாா்கள்.

குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் படி சோ்க்கைக்கு தோ்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயா் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் மே 29-ஆம் தேதி அன்று இணைய தளத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்.

சோ்க்கைக்கு தோ்வு செய்யப்பட்ட குழந்தைகளை மே 29-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சோ்க்க வேண்டும்.

இது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம்/மாவட்டக் கல்வி அலுவலகத்தை(தனியாா் பள்ளிகள்)தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com