கால்வாய் கட்டும் பணி: எம்எல்ஏ ஆய்வு

கால்வாய் கட்டும் பணி: எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் அருகே கால்வாய் கட்டும் பணியை குடியாத்தம் எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் ரூ.5 லட்சம் செலவில் கழிவுநீா் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியை குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி, மாதனூா் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், துணைச் செயலாளா் சேகா், மாவட்ட பிரதிநிதி ராஜன்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com