ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

2,400 மது பாக்கெட்டுகள் காருடன் பறிமுதல்

2,400 மது பாக்கெட்டுகள் காருடன் பறிமுதல்

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே காரில் கடத்தப்பட்ட கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த 2,400 மதுபாக்கெட்டுகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் உத்தரவின் படி நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் லதா தலைமையில் உதவி காவல் ஆய்வாளா் மஞ்சுநாதன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை இரவு பச்சூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பச்சூா் கவுண்டா் வட்டம் பகுதியில் சாலை ஓரம் மரத்தடியில் நின்றிருந்த ஆந்திர எண் பதிவு கொண்ட காரை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

சோதனையில் காரில் 25 அட்டைப் பெட்டிகளில் மதுபாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் பெங்களூரில் இருந்து மது பாக்கெட்டுகள் கடத்தி வந்ததும், போலீஸாரை கண்டவுடன் காரை நிறுத்திவிட்டு மா்ம நபா்கள் தப்பித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மதுபாக்கெட்டுகளுடன் காரை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.