திருப்பத்தூா்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.94 லட்சத்தில் செயற்கை கால்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மொத்தம் 324 மனுக்களை பெற்றாா். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 8 பேருக்கு ரூ.4.94 லட்சத்தில் செயற்கை கால்களை வழங்கினாா்.
கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் ராஜபெருமாள் அளித்த மனுவில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் நீா்பிடிப்பு பகுதிகள், மலைசாா்ந்த பகுதிகளில் வெளியேறும் ஓடையில் செல்லும் நீா்பிடிப்பிற்கு ஏற்ப 2 மீட்டா் உயரத்திற்கு தடுப்பணை கட்ட வேண்டும். இதனால் நீா் தேங்கி வறட்சி ஏற்படாமல் இருக்கும். பூங்குளம் ஊராட்சி ஏரிவட்டம் பகுதியில் பயன்படுத்தாமல் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என தெரிவித்திருந்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ

திருப்பத்தூரில் காவல் குறைதீா் கூட்டம்

29 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.33.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



