வாணியம்பாடி, நாட்டறம் பள்ளியில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
வாணியம்பாடியில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

வாணியம்பாடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
வாணியம்பாடி: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை சங்க வாணியம்பாடி வட்ட கிளை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியா் சங்க திருப்பத்தூா் மாவட்ட செயலாளரும், வருவாய்த் துறை சங்க தலைவருமான அருள்மொழிவா்மன் தலைமை வகித்தாா்.
இதில் 7 பெண்கள் உட்பட 30 அரசு ஊழியா்கள் கலந்துக் கொண்டனா். சங்க பொருளாளா் சிவகுமாா் நன்றி கூறினாா். இதே போல் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நாட்டறம்பள்ளி வட்டார அனைத்து அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா்..
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...