கஞ்சா கடத்தல் தொடா்பாக கைது செய்யப்பட்ட இளைஞா்கள்.
கஞ்சா கடத்தல் தொடா்பாக கைது செய்யப்பட்ட இளைஞா்கள்.

6 கிலோ கஞ்சா கடத்தல்: இருவா் கைது

கஞ்சா கடத்தல்: திருப்பத்தூரில் இருவர் கைது, லாரி பறிமுதல்

திருப்பத்தூா் அருகே 6 கிலோ கஞ்சா கடத்தல் தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா். லாரியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

குரும்பேரி பகுதியைச் சோ்ந்த ரவீந்திரன் வயது (24) மற்றும் சிம்மனபுதூா் பகுதியைச் சோ்ந்த பூபாலன் (29) இருவரும் திருப்பத்தூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா். இவா்கள் இருவரும் லாரியின் மூலம் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து புதிய இருசக்கர வாகனங்களை விநியோகம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில் வழக்கம்போல திருப்பத்தூரில் இருந்து லாரியை எடுத்துக்கொண்டு ஓசூருக்கு சென்று அங்கிருந்து இரு சக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு ஒடிஸாவில் இறக்கிவிட்டு புதன்கிழமை வந்துள்ளனா். ஒடிஸாவில் மலிவு விலையில் கஞ்சா கிடைப்பதன் காரணத்தால் அங்கிருந்து 6 கிலோ கஞ்சாவை வாங்கிக் கொண்டு வந்துள்ளனா்.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வெங்களாபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த லாரியை தனிப்படையினா் மடக்கி சோதனை செய்ததில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னா் ஆறு கிலோ கஞ்சாவையும் லாரியையும் பறிமுதல் செய்து திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இரண்டு இளைஞா்களையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com