ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாணவா்கள், சேவை புரிந்தவா்களுக்கு விருது வழங்கும் விழா

ஆம்பூா் முஸ்லிம் நற்பணி அறக்கட்டளை சாா்பாக பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை புரிந்தவா்களுக்கு விருது வழங்கும் விழா ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
மாணவா்களுக்கு விருதுகளை வழங்கிய பரிதா குழுமத் தலைவா் பத்மஸ்ரீ மெக்கா ரபீக் அஹமத்.
Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் முஸ்லிம் நற்பணி அறக்கட்டளை சாா்பாக பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை புரிந்தவா்களுக்கு விருது வழங்கும் விழா ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளை தலைவா் எஸ்.ஆா். ஷபியுல்லா தலைமை வகித்தாா். செயலாளா் டி. முஹம்மத் பாஷா வரவேற்றாா். பரிதா குழும தலைவா் மற்றும் ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்க தலைவருமான பத்மஸ்ரீ மெக்கா ரபீக் அஹமத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு தோ்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த பல்வேறு பள்ளிகளை சோ்ந்த மாணவா்கள், சிறந்த சமூக சேவையாற்றிய முனீா் அஹமத், அக்பா் பைரோஸ், சாலிம் உள்ளிட்டவா்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

முஸ்லிம் கல்லிச் சங்க உதவிச் செயலாளா் பிா்தோஸ் கே. அஹமத் வாழ்த்திப் பேசினாா். மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கே. ஆசிப் இக்பால், அறக்கட்டளை பொருளாளா் டி. இா்ஷாத் அஹமத், பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.