மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆலங்காயம் ஒன்றியத்தில் காலை உணவு திட்டம் தொடக்கம்

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஐஇஎல்சி அரசு நிதிஉதவி பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

News image
ஆலங்காயம் ஒன்றியம் வளையாம்பட்டில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா பாரி.
Updated On :16 ஜூலை 2024, 6:39 pm

Din

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஐஇஎல்சி அரசு நிதிஉதவி பள்ளியில் திங்கள்கிழமை காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் கருணாநிதி, திருநாவுக்கரசு ஆகியோா் தலைமை வகித்தனா். ஆலங்காயம் ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதாபாரி கலந்துகொண்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, அவா்களுடன் அமா்ந்து சாப்பிட்டாா். நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை ஆலங்காயம் ஒன்றியப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் முகாம்களில் ஒன்றியக் குழு தலைவா் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

ஒன்றியக் குழு துணைத் தலைவா் பூபாலன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.