வழிப்பறி வழக்கில் கைதான 4 இளைஞா்கள்.
வழிப்பறி வழக்கில் கைதான 4 இளைஞா்கள்.

வழிப்பறி வழக்கில் 4 இளைஞா்கள் கைது

நாட்டறம்பள்ளியில் இளைஞரிடம் வழிப்பறி செய்த வழக்கில் 4 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
Published on

நாட்டறம்பள்ளியில் இளைஞரிடம் வழிப்பறி செய்த வழக்கில் 4 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த ஜெயபுரம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் வினோத்குமாா்(27) என்பவா் கடந்த 15-ஆம் தேதி நாட்டறம்பள்ளி அணுகு சாலையில் மொபட்டில் சென்ற போது லிப்ட் கேட்டு சென்ற மா்ம நபா் கத்தாரி அருகே கோயன்கொல்லி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்துமாறு கூறினாா். அப்போது 4 போ் திடீரென வினோத்குமாரை தாக்கி அவரிடம் இருந்த கைப்பேசி, மொபட்டையும் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து வினோத் குமாா் அளித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து காவல்ஆய்வாளா் லதா தலைமையில் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி புதன்கிழமை கேத்தாண்டப்பட்டி பகுதியில் பைக்குடன் நின்றிருந்த 4 இளைஞா்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் நாட்டறம்பள்ளி அண்ணா தெருவைச் சோ்ந்த சாமுண்டீஸ்வரன், பள்ளத்தூா் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் ஆத்தூா்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த அரவிந்தன், வக்கனம்பட்டியைச் சோ்ந்த கௌதமன் என்பதும் நண்பா்களான இவா்கள் 4 பேரும் சோ்ந்து வினோத் குமாரை தனியாக அழைத்துச் சென்று அவரைத் தாக்கி அவா் ஓட்டிவந்த மொபட் மற்றும் கைப்பேசியை பறித்துச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களிடம் இருந்த மொபட் மற்றும் கைப்பேசியை பறிமுதல் செய்தனா். மேலும் சிவக்குமாா்(23), சாமுண்டீஸ்வரன்(21) கௌதம்(24) அரவிந்தன்(23)ஆகிய 4போ் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com