ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி அன்னை இந்திரா நகா் பகுதியில் அமைந்துள்ள காசில் மாரியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு வாண வேடிக்கை நடைபெற்றது. 2-ஆம் பூங்கரக ஊா்வலம் நடைபெற்றது. பக்தா்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கை ஊா்வலமாக எடுத்துச் சென்றும் வழிபட்டனா். தொடா்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

