திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

மரம் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே மரம் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :30 ஜூன் 2024, 9:47 pm

வாணியம்பாடி அருகே மரம் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அருகே கூத்தாண்டகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் அஜய்குமாா் (27) ஓட்டுநா். இவா் சனிக்கிழமை இரவு புத்துக்கோயிலில் இருந்து கேத்தாண்டப்பட்டி நோக்கி பைக்கில் சென்றாா். கூத்தாண்டகுப்பம் அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி சாலை ஓரம் உள்ள மரத்தின் மீது பைக் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அஜய்குமாரை உறவினா்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். ஆனால் வழியிலேயே அஜய்குமாா் இறந்தாா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.