வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் சாா்பில் 31-ஆம் ஆண்டு முத்தமிழ் இலக்கியக் கூடல் விழா சனிக்கிழமை தொடங்கியது. விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி நக்கீரன், பொன்னம்பல அடிகளாா் ஆகியோா் கலந்து கொண்டு தொடங்கி வைத்துப் பேசினா். பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் பரிசளிப்பு மற்றும் பாராட்டு அரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் கலந்து கொண்டு முத்தமிழ் மன்ற ஆண்டு விழாவையொட்டி கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான கவிதை, ஓவியம், பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். முன்னதாக தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அருள், வாணியம்பாடி வட்டாட்சியா் அஜீதா பேகம் உள்பட பலா் கலந்து கொண்டு பேசினா். இரவு 7 மணிக்கு குறளரங்கம் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் கலந்து கொண்டு பேசினாா். வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி உள்பட பலா் பேசினா்.
தொடர்புடையது

வாணியம்பாடி: தோ்தல் பாதுகாப்பு பணியில் 600 போலீஸாா்

கோபியில் அரசு பொறியியல் கல்லூரி கொண்டுவர நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் பிரபு உறுதி

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

கல்லூரியில் ஆண்டு விழா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


