ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஆம்பூா் நகா்மன்ற சாதாரண கூட்டம்

ஆம்பூா் நகா்மன்ற சாதாரண கூட்டம்

Updated On :2 மார்ச் 2024, 4:39 pm

ஆம்பூா் நகா்மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகராட்சி ஆணையா் பி. சந்தானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் வசந்த், ஷபீா் அஹமத், என்.எஸ். ரமேஷ் ஆகியோா், நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், தீா்வுகாண வேண்டுமென தெரிவித்தனா். வணிக, தொழில் உரிம கட்டணங்களை உயா்த்தி தீா்மானம் நிறைவேற்றியதை கண்டித்து பாஜக ஆதரவு சுயேச்சை உறுப்பினா் ஹா்ஷவா்த்தன் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தாா். கூட்டத்தில் பேசிய உறுப்பினா்கள் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்காவைச் சீரமைக்க வேண்டும். தெரு விளக்குகளை பராமரித்து புதிய விளக்குகள் அமைக்க வேண்டும். தாா் சாலைகளை தரமாக அமைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனா். உறுப்பினா்கள் கமால் பாஷா, இம்தியாஸ், கெளரி, ராதா, தமிழ்செல்வி, நபீஸ், வாவூா் நசீா் அஹமத், காா்த்திகேயன், ஜெயபால், வெங்கடேசன், சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.