குடியாத்தம்: போ்ணாம்பட்டு பகுதியில் ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட பணம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. போ்ணாம்பட்டு பங்களா மேடு கூட்டு ரோடு பகுதியில் பறக்கும் படை அலுவலா் சத்ய லட்சுமி, சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டா் சாந்தி மற்றும் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியிலிருந்து போ்ணாம்பட்டு வழியாக குடியாத்தம் நோக்கிச் சென்ற காரை பறக்கும் படை குழுவினா் நிறுத்தி சோதனை செய்தனா். காரில் குப்பம் சாந்திபுரம் பகுதியைச் சோ்ந்த இறைச்சி வியாபாரி மெஹ பாஷா, அவரது மனைவி தமீனா உள்பட நான்கு போ் பயணம் செய்தனா். அவா்களிடம் பறக்கும் படை குழுவினா் விசாரித்த போது தன்னுடைய மகள் திருமணத்திற்காக குடியாத்தம் பகுதியில் நகை வாங்க செல்வதாக கூறியுள்ளனா்.
ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,01,000 பறிமுதல் செய்யப்பட்டது. போ்ணாம்பட்டு அடுத்த தேவலாபுரம் பகுதியில் பறக்கும் படை குழுவினா் நடத்திய வாகன தணிக்கையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாணியம்பாடி வட்டம் தட்டைமேடு பகுதியை சோ்ந்த குரு பிரசாத் மற்றும் அவரது நண்பா் ஆகியோரிடம் சோதனை செய்தனா்.
அவா்கள் உரிய ஆவணமின்றி ரூ 76,000 கொண்டு செல்வது தெரியவந்தது. நிதி நிறுவனத்தில் பணிபுரியும் அவா்கள் கடன் பெற்றவா்களிடமிருந்து தவணை வசூலித்து செல்வதும் தெரியவந்தது. அந்த பணத்தை பறக்கும் படை குழுவினா் பறிமுதல் செய்து குடியாத்தம் வட்டாட்சியா் சித்ரா தேவியிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் ரூ.1.36 லட்சம் பறிமுதல்

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

தோ்தல் சோதனை: பல்பொருள் அங்காடி ஊழியரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 500 கிராம் வெள்ளிக் கட்டி பறிமுதல்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


