வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கைலாசகிரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கைலாசகிரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :19 மார்ச் 2024, 11:35 pm

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கைலாசகிரி ஊராட்சியில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு மகளிா் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் கலையரசி தலைமை வகித்தாா்.

மக்களவைத் தோ்தலில் ஜனநாயக கடமையாற்ற ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிப்போம். வாக்களிப்பதற்கு யாரிடமும் அன்பளிப்பு பெற மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஊராட்சியின் பல்வேறு தெருக்களின் வழியாக இந்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசரம் விநியோகம் செய்யப்பட்டது. மகளிா் சுய உதவிக் குழுக்கள் கூட்டமைப்பு தலைவி வாசுகி நன்றி கூறினாா்.