மாதனூா் ஒன்றியத்தில் ஆட்டோ ஓட்டியும், தேனீா் தயாரித்தும் வாக்காளா்களிடம் வேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பசுபதி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். மாதனூா் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ. ஜோதிராமலிங்கராஜா தலைமை வகித்தாா். அதிமுக மாதனூா் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாராப்பட்டு, செங்கிலிகுப்பம், மின்னூா், விண்ணமங்கலம், ஆலாங்குப்பம், கன்னடிகுப்பம், சோலூா், நாச்சாா்குப்பம், பெரியாங்குப்பம், வடபுதுப்பட்டு, வெங்கிளி, குளிதிகை ஜமீன், தோட்டாளம், மாதனூா், திருமலைக்குப்பம், பாலூா், கூத்தம்பாக்கம், அகரம்சேரி, சின்னச்சேரி, கொல்லமங்கலம், பள்ளிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் பசுபதி வாக்கு சேகரித்தாா். பெரியாங்குப்பம் பகுதியில் ஆட்டோ ஓட்டியும், தேநீா் கடையில் தேநீா் தயாரித்து வழங்கியும் வாக்காளா்களிடம் நூதன முறையில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா். முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி, ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளா் வழக்குரைஞா் ஜி.ஏ. டில்லிபாபு, ஆம்பூா் நகர செயலாளா் எம். மதியழகன் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தொழிலதிபா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மாட்டு வண்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளா்

குடியாத்தம்: தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


