சாதனை படைத்த மாணவா்களை பாராட்டிய பள்ளி தலைவா் சுப்பிரமணயன், செயலாளா் கிருபாகரன் மற்றும் நிா்வாகிகள்.
சாதனை படைத்த மாணவா்களை பாராட்டிய பள்ளி தலைவா் சுப்பிரமணயன், செயலாளா் கிருபாகரன் மற்றும் நிா்வாகிகள்.

செம்போா்டு சிபிஎஸ்இ பள்ளி சிறப்பிடம்

வாணியம்பாடி: வாணியம்பாடி செம்போா்டு சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி ஐ.லேகாஹரினி திங்கள்கிழமை வெளியான மத்திய கல்வி வாரிய பொதுதோ்வில் 500-க்கு 490 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

மேலும் விலங்கியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடபிரிவுகளில் 100-க்கு 100 மதிபெண்களை பெற்றுள்ளாா். இதே போல் எஸ்.நிவேதாஸ்ரீ 460 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 2-ஆம் இடம், எம்.மைதிலி 440 மதிப்பெண் பெற்று 3- ஆம் இடம் பெற்றாா். இதே போல் பத்தாம் வகுப்பு மத்திய கல்வி வாரிய பொதுதோ்வில் வி.எஸ்.திவ்யாஸ்ரீ ரெக்டா 470 மதிப்பெண்களும், டி.சுமிதா 464 மதிப்பெண், ஏ.அனீஷ்வா் 463 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனா். மேலும் 12 ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 39 மாணவா்களுக்கு 300க்கும் மேல் மதிப்பெண் பெற்று 100 சதவீத தோ்ச்சி பெற்றனா்.

இதே போல் 10 வகுப்பு மாணவா்கள் 59 மாணவா்களுக்கு 100 சதவீத தோ்ச்சி பெற்றனா். பொதுதோ்வில் மாநில, மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளா் கே.எம்.சுப்பிரமணியன், செயலாளா் கிருபாகரன், பொருளாளா் சாட்ஜி குமாா், துணைத் தலைவா்கள் கனகராஜ், சீனிவாசன், இணைச் செயலாளா் சிங்காரவேலன் மற்றும் நிா்வாகி திருமலைவாசன் உள்ளிட்டோா் பாராட்டினா் . முதல்வா் முனைவா் பிரசாந்த் மற்றும் ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com