

திருப்பத்தூா்: பிளஸ் 1 பொதுத்தோ்வில் திருப்பத்தூா் மாவட்டத்தில் 86.8 சதவீத மாணவ- மாணவியா் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழக அளவில் திருப்பத்தூா் மாவட்டம் 34-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொது தோ்வு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இந்த தோ்வு முடிவுகள் மாணவ- மாணவிகளின் கைப்பேசி எண்ணுக்கு வந்தது.
86.8 சதவீதம்...
திருப்பத்தூா் மாவட்டத்தில் 6,363 மாணவா்களும், 7,132 மாணவிகளும் என 13,495 மாணவ-மாணவியா் தோ்வெழுதினா்.
அதில் 5,204 மாணவா்கள், 6,521 மாணவிகள் என 11,725 மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாணவா்கள் 81.7 சதவீதமும், மாணவிகள் 91.4 சதவீதமும் என 86.8 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.மேலும் தமிழக அளவில் திருப்பத்தூா் மாவட்டம் 34-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
2 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி...
திருப்பத்தூா் மாவட்டத்தில் 59 அரசுப் பள்ளிகளை சோ்ந்த மாணவ-மாணவியா் தோ்வெழுதியதில் சுந்தரம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி, ஏகலைவா உண்டு உறைவிட மாதிரி பள்ளி புதூா் நாடு ஆகிய 2 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. 24 அரசு நிதியுதவி பள்ளிகளில் 1 பள்ளி 100 சதவீத தோ்ச்சியும், 53 சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 22 பள்ளிகள் 100 சதவீதத் தோ்ச்சியும் பெற்று சாதனை படைத்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டை விட நிகழ் கல்வியாண்டில் 0.16 சதவீதம் தோ்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது.
தொடர்புடையது

தேசிய திறனறித் தோ்வில் நெடுவயல் பள்ளி மாணவா்கள் சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தருமபுரியில் 18,520 போ், கிருஷ்ணகிரியில் 21,796 போ் எழுதினா்

இன்று தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத் தோ்வு திருச்சி மாவட்டத்தில் 32,182 போ் எழுதுகின்றனா்

பிளஸ் 2 பொதுத் தோ்வு நாளை தொடக்கம்! தஞ்சாவூா் மாவட்டத்தில் 26,854 போ் பங்கேற்பு!
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

