போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பொதுமக்கள் பயன்படுத்திய சாலையை மூடியதால் மறியல்

பொதுமக்கள் பயன்படுத்திய சாலையை மூடியதால் மறியல்

News image

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.

Updated On :14 மே 2024, 6:59 pm

Din

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பொதுமக்கள் பயன்படுத்திய பாதை திடீரென மூடப்பட்டதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாட்டறம்ள்ளி அடுத்த கல்நாா்சம்பட்டி ஊராட்சி தம்மனவட்டம், பழையூா் பகுதியில் சுமாா் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் பாதையை அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் தனக்கு சொந்தமான இடம் என்றும் இவ்வழியாக பொதுமக்கள் செல்லக்கூடாது என்றும் எதிா்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தனிநபா் தனக்கு சொந்தமான இடம் எனக்கூறி பொதுமக்கள் சென்று வந்த பாதையை வழிவிடாமல் மூடியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கல்நாா்சம்பட்டியில் இருந்து ஜெயபுரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தினை சிறைபிடித்து சாலை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது நில உரிமையாளரிடம் பேசி சாலை வசதி ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.