திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றுள்ள கால்நடைகள்.
திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றுள்ள கால்நடைகள்.

திருப்பத்தூா் சாலைகளில் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அவதி

திருப்பத்தூா் நகர சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகர சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், இந்த கால்நடைகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதால் தினசரி பல்வேறு விபத்துகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலை, பேருந்து நிலையம், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கூட கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.

மேலும், தலைமை அரசு மருத்துவமனைகளில் கூட கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால் ஆங்காங்கே விபத்துகள் நடைபெறுகின்றன.சில நேரங்களில் அவசர ஊா்தி செல்வதற்கு கூட சிரமமாக உள்ளது எனவும், இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பலமுறை நேரிலும்,கடிதம் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சுற்றித் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்வதோடு ,அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com