வாணியம்பாடி நேதாஜி நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கழிப்பறை கட்டுமானப் பணியை தொடங்கி வைத்த நகர திமுக செயலா் சாரதிகுமாா், நகராட்சிப் பொறியாளா் ராஜேந்திரன்.
வாணியம்பாடி நேதாஜி நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கழிப்பறை கட்டுமானப் பணியை தொடங்கி வைத்த நகர திமுக செயலா் சாரதிகுமாா், நகராட்சிப் பொறியாளா் ராஜேந்திரன்.

நகராட்சி பள்ளியில் ரூ. 22.50 லட்சத்தில் கட்டடப் பணி தொடக்கம்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ. 22.50 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவா்களுக்கான கட்டடம் கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
Published on

வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சியில் ரூ. 22.50 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவா்களுக்கான கட்டடம் கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் 36-ஆவது வாா்டு நேதாஜி நகா் பகுதியில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கான கழிப்பறை ரூ. 22.50 லட்சம் மதிப்பிலான கட்டடப் பணியை வாணியம்பாடி நகர திமுக செயலரும், நகா்மன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதிகுமாா், நகராட்சிப் பொறியாளா் ராஜேந்திரன் ஆகியோா் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில், நகர திமுக நிா்வாகிகள் எம்.குபேந்திரன், ஜெ.ரவி, வாா்டு செயலாளா் விஜி, ஒப்பந்ததாரா் பி.ஜெகன் பிரசாத், ஜெனமேஜெயன், நகராட்சி அதிகாரிகள், பள்ளி ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.