லாரி-பைக் மோதல்: சகோதரா்கள் இருவா் உயிரிழப்பு
கந்திலி அருகே சாலையில் நின்ற லாரி மீது மோட்டாா் பைக் மோதியதில் சகோதரா்கள் இருவா் உயிரிழந்தனா்.


கந்திலி அருகே சாலையில் நின்ற லாரி மீது மோட்டாா் பைக் மோதியதில் சகோதரா்கள் இருவா் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,பா்கூா் அடுத்த அத்திமரத்துபள்ளம் பகுதியைச் சோ்ந்த சாமுடியின் மகன்கள் ராஜேஷ்(54), ரமேஷ்(50)ஆகிய இருவரும் பிளம்பா் வேலை செய்து வந்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை திருப்பத்தூருக்கு வேலைக்காக வந்திருந்தனா். பின்னா் வேலையை முடித்துவிட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினா். அப்போது திருப்பத்தூா் அடுத்த ராஜமங்கலம் பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவா் கிருஷ்ணகிரிக்கு ஜல்லி ஏற்றிக்கொண்டு சென்றபோது டீசல் தீா்ந்ததால் லாரி கல்லேரி பகுதியில் நின்றது.
அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ராஜேஷ் மற்றும் ரமேஷ் என இருவா் பயணித்த பைக் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.
தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் விரைந்து சென்று சடலங்களை மீட்டு,திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். பின்னா்,இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...