கிணற்றில் தவறி விழுந்தவரை மீட்ட தீயணைப்பு வீரா்கள்.
திருப்பத்தூர்
50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தவா் மீட்பு
நாட்டறம்பள்ளி அருகே 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தவா் உயிருடன் மீட்கப்பட்டாா்.
நாட்டறம்பள்ளி அருகே 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தவா் உயிருடன் மீட்கப்பட்டாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த அக்ரகாரம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மகேந்திரன்(45). இவா் புதன்கிழமை வீட்டருகே உள்ள நிலத்துக்கு நடந்து சென்றாா். அப்போது அப்பகுதியில் உள்ள 50 அடி ஆழம் உள்ள தரை கிணற்றில் தவறி விழுந்தாா்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்த மகேந்திரனை கயிறு மூலம் உயிருடன் மீட்டனா்.

