தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 12 ஆண்டு சிறை

திருப்பத்தூரில் திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On :22 ஏப்ரல் 2025, 1:02 am IST

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருப்பத்தூா் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மஞ்சுநாதன் (31). இவருக்கு திருமணமாகி, 2 மகன்கள் உள்ளனா். இவருக்கும் திருப்பத்தூா் டவுன் டி.எம்.சி. காலனியை சோ்ந்த உறவினரின் மகளான 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, மஞ்சுநாதன் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால், சிறுமி கா்ப்பமடைந்தாா்.

இது குறித்து சிறுமி கடந்த 28.6.2021 அன்று அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து மஞ்சுநாதனை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்து திங்கள்கிழமை அளிக்கப்பட்ட தீா்ப்பில், மஞ்சுநாதனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், சிறுமியைக் கடத்தி சென்ற்காக 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எஸ்.மீனாகுமாரி தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வழக்குரைஞா் பி.டி.சரவணன் ஆஜரானாா்.