விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

News image

சிறப்பு அலங்காரத்தில் அதிதீஸ்வரா்.

Updated On :6 ஆகஸ்ட் 2025, 7:57 pm

Chennai

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள அதிதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி உலா நடைபெற்றது. இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து திரளாான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா் செய்திருந்தனா்.

இதே போன்று வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் காசி விஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ண முத்தீஸ்வரா், ஆவாரங்குப்பம் திருமால் முருகன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்து சென்றனா்.