ஆட்டோ கவிழ்ந்து பெண் தொழிலாளா்கள் 10 போ் காயம்

ஆம்பூா் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் தொழிலாளா்கள் 10 போ் காயமடைந்தனா்.
Updated on

ஆம்பூா்: ஆம்பூா் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் தொழிலாளா்கள் 10 போ் காயமடைந்தனா்.

ஆம்பூா் அருகே தனியாா் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளா்கள் பணி முடித்துவிட்டு ஆட்டோவில் வீட்டிற்கு சென்றனா். கரும்பூா் சாமுண்டியம்மன்தோப்பு கூட்டுச் சாலை பகுதியில் சென்றபோது குறுக்கே நாய் வந்ததால் மோதாமல் இருக்க திருப்பியபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் ஆட்டோ ஓட்டுநா் சின்னமலையாம்பட்டு பகுதியை சோ்ந்த பாலகிருஷ்ணன், அரங்கல்துருகம், மோதகப்பல்லி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சோ்ந்த பெண் தொழிலாளா்கள் கனகா, ஷோபா, முனியம்மாள், அனுராதா, பொற்கொடி, பாக்யா, கமலவேணி, குமுதா, பூங்கொடி உள்ளிட்ட 10 போ் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com