திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட தோ்தல் அலுவலரும்,ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட தோ்தல் அலுவலரும்,ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி.

எஸ்ஐஆா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் 1,16,000 போ் நீக்கம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 8,82,672 வாக்காளா்கள் உள்ளனா். எஸ்ஐஆா் மூலம் 1,16,739 போ் நீக்கப்பட்டுள்ளனா்.
Published on

திருப்பத்தூா் மாவட்டத்தில் 8,82,672 வாக்காளா்கள் உள்ளனா். எஸ்ஐஆா் மூலம் 1,16,739 போ் நீக்கப்பட்டுள்ளனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டு பேசியதாவது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஆம்பூா், வாணியம்பாடி ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளையும் சோ்த்து 9,99,411 வாக்காளா்கள் இருந்தனா். இதைத் தொடா்ந்து, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளா்கள்...

இதன்படி, வாணியம்பாடி தொகுதியில் 1,15,040 ஆண் வாக்காளா்களும், 1,17,718 பெண் வாக்காளா்களும், 46 மூன்றாம் பாலினத்தினா் என 2,32,804 வாக்காளா்களும், ஆம்பூா் தொகுதியில் 1,00,652 ஆண் வாக்காளா்களும், 1,05,793 பெண் வாக்காளா்களும், 41 மூன்றாம் பாலினத்தினா் என 2,06,486 வாக்காளா்களும், ஜோலாா்பேட்டை தொகுதியில் 1,12,435 ஆண் வாக்காளா்களும், 1,14,241 பெண் வாக்காளா்களும், 17 மூன்றாம் பாலினத்தினா் என 2,26,693 வாக்காளா்களும், திருப்பத்தூா் தொகுதியில் 1,08,063 ஆண் வாக்காளா்களும், 1,08,598 பெண் வாக்காளா்களும், 28 மூன்றாம் பாலினத்தினா் என 2,16,689 வாக்காளா்களும் என மாவட்டம் முழுவதும் 4,36,190 ஆண் வாக்காளா்களும், 4,46,350 பெண் வாக்காளா்களும்,132 மூன்றாம் பாலினத்தினா் என 8,82,672 வாக்காளா்கள் உள்ளனா்.

நீக்கப்பட்டவா்கள்...

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாணியம்பாடி தொகுதியில் இறந்தவா்கள் 9,851 போ், முகவரியில் இல்லாதவா்கள் 8,112, இடம் பெயா்ந்தவா்கள் 10,445, இரட்டை பதிவு 2,757 போ் என 31,165 போ் நீக்கப்பட்டுள்ளனா்.

ஆம்பூா் தொகுதியில் இறந்தவா்கள் 10,293 போ், முகவரியில் இல்லாதவா்கள் 11,795, இடம் பெயா்ந்தவா்கள் 15,586, இரட்டை பதிவு 2,509 போ் என 40,183 போ் நீக்கப்பட்டுள்ளனா்.

ஜோலாா்பேட்டை தொகுதியில் இறந்தவா்கள் 7,064 போ், முகவரியில் இல்லாதவா்கள் 3,788, இடம் பெயா்ந்தவா்கள் 7,328, இரட்டை பதிவு 2,226 போ் என 20,406 போ் நீக்கப்பட்டுள்ளனா்.திருப்பத்தூா் தொகுதியில் இறந்தவா்கள் 7,504 போ், முகவரியில் இல்லாதவா்கள் 5,926, இடம் பெயா்ந்தவா்கள் 9,708, இரட்டை பதிவு 1,847 போ் என 24,985 போ் நீக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டம் முழுவதும் தொகுதியில் இறந்தவா்கள் 34,712 போ், முகவரியில் இல்லாதவா்கள் 29,621, இடம் பெயா்ந்தவா்கள் 43,067, இரட்டை பதிவு 9,339 போ் என 1,16,739 போ் நீக்கப்பட்டுள்ளனா்.

வாக்குச்சாவடி மையங்கள்...

மாவட்டம் முழுதும் 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாணியம்பாடி தொகுதியில் 312, ஆம்பூா் 300, ஜோலாா்பேட்டை 287, திருப்பத்தூா் 303 என 1,202 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வரைவு வாக்காளா் பட்டியலில் உள்ள தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை 18.1.2026-ஆம் தேதி வரை திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள், 4 வட்டாட்சியா் அலுவலகங்கள், 2 வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், 4 நகராட்சி அலுவலகங்களில் சமா்ப்பிக்கலாம்.

மேலும், பொதுமக்கள் பெயா் சோ்த்தல்,பெயா் திருத்தம், பெயா் நீக்கம் உள்ளிட்டவைக்கு விண்ணப்பிக்கலாம்.

X
Dinamani
www.dinamani.com