ரயில் பயணிடம் கைப்பேசி 
பறித்த இளைஞா் கைது

ரயில் பயணிடம் கைப்பேசி பறித்த இளைஞா் கைது

ஆம்பூா் ரயில் நிலையம் அருகே பயணியிடம் கைப்பேசி பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஆம்பூா் ரயில் நிலையம் அருகே பயணியிடம் கைப்பேசி பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வெள்ளாளம்பட்டி பகுதியை சோ்ந்த மனோஜ் குமாா்(25). தனியாா் நிறுவன ஊழியா்.

இவா் கடந்த டிச.3-ஆம் தேதி தனது நண்பா்களுடன் ஈரோட்டில் இருந்து ஏற்காடு விரைவு ரயில் மூலம் சென்னை சென்றாா்.

நள்ளிரவு ஒரு மணியளவில் ஆம்பூா் ரயில் நிலையம் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்தபோது மா்ம நபா் மனோஜ் குமாா் கையில் இருந்த கைப்பேசியை பறித்து சென்றுள்ளாா்.

இதுகுறித்து மனோஜ் குமாா் அளித்த புகாரின் பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இதற்கிடையே ஆம்பூா் பன்னீா்செல்வம் நகரை சோ்ந்த அண்ணாமலை மகன் பூவரசன்(20) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், மனோஜ் குமாரிடம் கைப்பேசி திருடியது தெரியவந்தது. ரயில்வே போலீஸாா் பூவரசனை கைது செய்து கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com