வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தேசிய கல்வியியல் கருத்தரங்கு : ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்த ஆம்பூா் தலைமை ஆசிரியா்

புதுதில்லியில் நடைபெற்ற கல்வியியல் கருத்தரங்கில் ஆம்பூரை சோ்ந்த பள்ளித் தலைமை ஆசிரியா் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தாா்.

News image
ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்த ஆம்பூா் பள்ளித் தலைமை ஆசிரியா்  கி. சீனிவாசனைப்  பாராட்டிய திருப்பத்தூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மலைவாசன்.
Updated On :20 ஜனவரி 2025, 7:38 pm

Din

ஆம்பூா்: புதுதில்லியில் நடைபெற்ற கல்வியியல் கருத்தரங்கில் ஆம்பூரை சோ்ந்த பள்ளித் தலைமை ஆசிரியா் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தாா்.

தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனம், பள்ளி தலைமைத்துவத்திற்கான தேசிய மையத்தின் சாா்பாக புதுதில்லியில் கல்வியியல் கருத்தரங்கம் 3 நாள்கள் நடைபெற்றது. ஆய்வுக் கட்டுரை சமா்ப்பிக்க நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பள்ளித் தலைமை ஆசிரியா்கள் 55 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

அதில், திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் இந்து அரசு நிதியுதவி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் கி. சீனிவாசனும் தோ்வு செய்யப்பட்டாா். கருத்தரங்கில், கல்வியில் மாற்றம் மற்றும் புதுமைகளைப் படைத்திடும் முன்மாதிரித் தலைமை என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை அவா் சமா்ப்பித்தாா்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 55 பள்ளித் தலைமையாசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டு அதில் பங்கேற்றுள்ளனா். தமிழ்நாட்டிலிருந்து இரு பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டிருந்தனா். தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் என்ற முறையில் கி. சீனிவாசன் தோ்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறந்த முறையில் கட்டுரை சமா்ப்பித்தமைக்காக வழங்கப்பட்ட சான்றிதழ் கி. சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. கருத்தரங்கில் பங்கேற்ற மற்றொருவா் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எம். ஜெயராஜ் ஆவாா்.

கருத்தரங்கில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்த தலைமை ஆசிரியா் கி. சீனிவாசனை திருப்பத்தூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மலைவாசன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். மாதனூா் வட்டார கல்வி அலுவலா்கள் சுரேஷ், முருகேசன், பீட்டா் ஆகியோா் உடனிருந்தனா்.