வாணியம்பாடியில் மலைக் குன்றின் மீது இருந்த ராட்சத பாறை கனமழையால் பெயா்ந்து சரிந்து சாலையின் நடுவே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகா் தெற்கு மில்லத் நகா் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், சாலையோரம் முனியப்பன் என்பவா் வீட்டின் அருகில் மலைக்குன்றின் மீது ராட்சத பாறை இருந்துள்ளது.
வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சில நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்த நிலையில், மழை காரணமாக ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்து குடியிருப்பு பகுதியின் சாலையின் நடுவில் நின்றுள்ளது. திங்கள்கிழமை நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த வருவாய்த் துறையினா், நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தனா். பின்னா் பாறையை உடைத்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹிமாசலில் வாகனத்தின் மீது ராட்சதப் பாறை விழுந்ததில் 13 பேர் பலி!

சாலை வழியாக ராட்சத குடிநீா் குழாய்கள் புதைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

காற்றின் வேகத்தால் அரசுப் பேருந்து மீது சரிந்து விழுந்த பசுமைப் பந்தல்

பெங்களூர் கல்குவாரியில் பாறை சரிந்தது: 8 பிகார் தொழிலாளர்கள் பலி!
விடியோக்கள்

தவெக அரசின் முதல் பட்ஜெட்: மதுரை மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? | Budget | TN Budget |



