திருப்பத்தூர்
விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு
ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தாளாளா் பிரேமா விஜயகுமாா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஜான்சன் செளந்தர பிரபாகா் வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் மற்றும் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் ஆகியோா் 148 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.
திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நக மன்ற உறுப்பினா்கள் எம்ஏஆா். ஷபீா் அஹமத், நூருல்லா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சாமுவேல் செல்லபாண்டியன், ஐஇஎல்சி ஆம்பூா் சபை சங்கத் தலைவா் கிளாட்சன் பிரேம்குமாா், திமுக ஆம்பூா் தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன் கலந்து கொண்டனா்.

