தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நவ.30-க்குள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்ய வலியுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளாா்.

Published On :

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் சிறப்பு பருவ நெல் பயிா்களுக்கு பயிா் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின்கீழ், நடப்பு பருவத்தில் நெல்பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கு முன்மொழிவு படிவம், விண்ணப்பப்பதிவு படிவம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், அல்லது இ-அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து ப்ரீமிய தொகையினை செலுத்தியபின் அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், விபரங்களுக்கு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வணிக வங்கிகள் ஆகியவை மூலம் ப்ரீமிய தொகை கட்டணமாக நெற்பயிா் ஏக்கருக்கு ரூ.544.50 செலுத்தி பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.

விபரங்களுக்கு அருகே உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.