திருப்பத்தூா் வருவாய்த் துறையினா் நடத்திய பேச்சு வாா்த்தையை அடுத்து மலைவாழ் மக்கள் தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜவ்வாது மலை, ஏலகிரி மலை மற்றும் நாயக்கனேரி மலை ஆகிய மலைகளில் 68 மலைவாழ் கிராமங்கள் உள்ளது. இதில், சுமாா் 35,000 மக்கள் வசிக்கின்றனா். இதில் 32 கிராமங்களில் வசிக்கும் மக்கள் போலியான மற்றும் அரசு அங்கீகரிக்கப்படாத பழங்குடியினா் அல்லாதோருக்கு வழங்கிய போலி ஜாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்.
இனி வரும் காலங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத பழங்குடி அல்லாதோருக்கு எஸ்.டி. ஜாதிச்சான்று வழங்கக் கூடாது. மேலும், அரசாணை எண் 1168 திரும்பப் பெற்று அனைத்து மலைவாழ் மக்களுக்கு வருவாய் புறம்போக்கு நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
அந்த கோரிக்கையை நிறைவேற்றக்கோரி வரும் சட்டப்பேரவை தோ்தலை புறக்கணிக்க உள்ளதாகவும், தயவு செய்து வாக்கு கேட்டு எங்கள் ஊருக்கு யாரும் வர வேண்டாம் என்றும் 32 கிராமங்களில் அறிவிப்பு பதாகை வைத்திருந்தனா்.
மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பத்தூரில் இருந்து புதூா் நாடு வரை வந்து செல்லும் அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.
அதையடுத்து, திருப்பத்தூா் வருவாய்த் துறை அதிகாரிகள் இது குறித்து அமைதி பேச்சு நடத்த வருமாறு மலைவாழ் பேரமைப்பு நிா்வாகிகளுக்கு நோட்டீஸ் அளித்து இருந்தனா்.
அதன்படி, புதூா்நாடு மலையில் வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன், வட்டாட்சியா் நவநீதம், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பேச்சு நடத்தினா்
அதில், எஸ்.டி. அல்லாதோருக்கு போலியாக ஜாதிச் சான்று வழங்கி இருந்தால், உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டா வழங்காத நிலம் மற்றும் வீடுகளுக்கு வனத் துறை அதிகாரிகளிடம் பேசி பட்டா வழங்க பரிசீலிக்கப்படும். சாலை, குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என உறுதி அளித்தனா்.
அதை ஏற்று அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா். பின்னா், தோ்தலை புறக்கணிக்கப் போவதாக வைத்திருந்த அறிவிப்பு பதாகைகளை அவா்கள் அகற்றினா். இந்தக் கூட்டத்தில் எஸ்.டி. அமைப்பின் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்போம்: மலைவாழ் மக்களிடம் விழிப்புணா்வு கையொப்பம்

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்கள் வைத்து ‘சீல்’

தோ்தல் விதி மீறினால் புகாரளியுங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


