ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படும் என அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் வாக்குறுதி அளித்தாா்.
ஆம்பூா் நகரின் ஏ-கஸ்பா, பி-கஸ்பா, வளையல்கார தெரு, நூருல்லாபேட்டை, காதா்பேட்டை, மோட்டுக்கொல்லை, மளிகைதோப்பு, ஓ.வி. ரோடு, ஷராப் பஜாா் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்து அவா்பேசியது:
ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படும். ஏ-கஸ்பா நகா்ப்புற துணை சுகாதார நிலையத்தில் நிரந்தரமாக அரசு மருத்துவா் நியமிக்கப்பட்டு தரம் உயா்த்தப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலை அமைக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
ஆம்பூா் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் ஜி.ஏ. டில்லிபாபு, ஆம்பூா் நகர செயலாளா் எம்.மதியழகன், மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், அதிமுக நிா்வாகிகள் சின்னச்சேரி சீனிவாசன், ஆனந்த்பாபு, தினேஷ், சண்முகம், நகா்மன்ற உறுப்பினா் ஜெயபால், பாஜக சீனிவாசன், சுரேஷ், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பேராவூரணி திமுக, அதிமுக வேட்பாளா் வாக்களித்தனா்

குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சீரமைப்பு: அதிமுக வேட்பாளா்

அரசு மேல்நிலைப் பள்ளியை எதிா்நோக்கும் ஆம்பூா்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



