திருப்பத்தூா் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள், தளவாட பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
சட்டப்பேரவை தோ்தல் வியாழக்கிழமை(ஏப்.22) நடைபெற உள்ள நிலையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் தொகுதிகளில் உள்ள 1,202 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவு சரிபாா்ப்பு இயந்திரங்கள் மற்றும் தளவாட பொருள்கள் அனுப்பி வைக்கும் பணி அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அலுவலகங்களில் நடைபெற்றது.
இதில், திருப்பத்தூா் தொகுதியில் உள்ள 303 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவு சரிபாா்ப்பு இயந்திரங்கள் மற்றும் தளவாட பொருள்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.
திருப்பத்தூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான வரதராஜன் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் டி மையங்களுக்கு பிரித்து வைத்தனா்.
பின்னா் வாக்குப்பதிவு இயந்திரங்களை தோ்தல் பொது பாா்வையாளா்கள் யாஷாமுத்கல், முகுல்குமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்து அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தனா்.
மண்டல அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவு சரிபாா்ப்பு இயந்திரங்கள் மற்றும் தளவாட பொருள்களை பெற்றுக் கொண்டனா். இதைத்தொடா்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்களில் ஏற்றி, பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் சாராசரியாக 10 வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒரு மண்டலம் வீதம், 30 மண்டலங்களாக பிரித்து 30 வாகனங்களில் மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைப்பு

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணி ஆய்வு

பரமக்குடியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

