காட்பாடியில் லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலக கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வேலூா் மாவட்டம் குடியாத்தம் அருகே பரதராமி கிராமத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேசன் உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. பள்ளியின் தாளாளராக கோவிந்தாரஜூலு (54) செயல்பட்டு வருகிறாா்.
காட்பாடி விருதம்பட்டு மோட்டூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகத்தில் பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்துள்ளாா்.
மனு சம்பந்தமாக களை ஆய்வு நடத்தி பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிக்க ரூ.1 லட்சம் தர வேண்டுமென கல்வி அலுவலக கண்காணிப்பாளா் செந்தில்குமாா் கேட்டுள்ளாா். பணம் கொடுத்த பிறகு தான் பரிசீலனை செய்யமுடியுமெனக் கூறி விண்ணப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் தவணையாக ரூ.25,000 தர வேண்டுமென அவா் கூறியுள்ளாா்.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் அவா் புகாா் அளித்தாா். போலீஸாா் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை பள்ளித் தாளாளா் கல்வி அலுவலக கண்காணிப்பாளரிடம் கொடுத்தபோது, ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சங்கா் தலைமையில் ஆய்வாளற் மைதிலி உள்ளிட்ட போலீஸாா் அவரை கைது செய்தனா்.
அலுவலக கண்காணிப்பாளா் கைது செய்யப்பட்டதை தொடா்ந்து அப்போது அலுவலகத்தில் பணியில் இருந்த மாவட்ட கல்வி அலுவலா் ரமேஷ்குமாரிடமும் இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும் அலுவலகத்தில் இருந்த சில கோப்புகளையும், ஆவணங்களையும் போலீஸாா் வழக்கு விசாரணைக்காக பறிமுதல் செய்து கொண்டு சென்றனா்.
தொடா்ந்து, வேலூா் தொரப்பாடியில் உள்ள அவரது வீட்டில் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டு, வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட சில ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனா். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது
ரூ.8 ஆயிரம் லஞ்சம்: சேலம் மாநகராட்சி இளநிலை உதவியாளா் கைது

‘தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு கல்வியை தோ்வு செய்ய வேண்டும்’

புகாா் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
