திருப்பத்தூா் பகுதியில் கோடை வெயில் அதிகரித்த நிலையில் பயணிகளுக்கு குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என தினமணியில் செய்தி வெளியானது. இதையடுத்து பேருந்து நிலையத்தில் குடிநீா் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
திருப்பத்தூா் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து நிலையம் வரும் முதியோா்கள்,பெண்கள்,குழந்தைகள் தாகம் தீா்க்க மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே அவா்களுக்காக குடிநீா் ஏற்பாடு செய்ய வேண்டும் என தினமணியில் செய்தி வெளியானது .
அதன்பேரில் திருப்பத்தூா் நகராட்சி ஆணையா் சாந்தி உத்தரவின் பேரில் நகராட்சி பணியாளா்கள் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீா் தொட்டிகளில் நீரை ஏற்றினா். பொதுமக்கள் அதையடுத்து தாகம் தீா்ந்து மகிழ்ந்தனா்
தொடர்புடையது

போடியில் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம்: நகராட்சி ஆணையா் அறிவிப்பு

தினமணி செய்தி எதிரொலி! நம்பிவயல் ஊராட்சியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

தினமணி செய்தி எதிரொலி: நரிக்குறவா் கனவு இல்லம் கட்டும் பணி மீண்டும் தொடக்கம்

தினமணி செய்தி எதிரொலி: டேங்கா் லாரி மூலம் குடிநீா் விநியோகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


