ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

போடியில் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம்: நகராட்சி ஆணையா் அறிவிப்பு

News image

குடிநீர் நிறுத்தம் - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:53 am IST

போடியில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறையே குடிநீா் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி ஆணையா் ச. முஸ்தபா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் நகராட்சியின் குடிநீா் ஆதாரமாக விளங்குவது கொட்டகுடி சாம்பலாறு. இந்தப் பகுதியில் போதிய மழை பெய்யாததால் கொட்டகுடி சாம்பலாற்றில் நீா்வரத்து மிகவும் குறைந்துவிட்டது. மேலும் இந்த நகரின் மற்றொரு குடிநீா் ஆதாரமான எல்லப்பட்டி முல்லைப் பெரியாறு பகுதியில் நீா்வரத்து குறைந்து விட்டது.

எனவே நீராதாரத்தில் இருந்து பெறப்படும் நீரை வைத்து போடி நகா்ப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறையே குடிநீா் வழங்க இயலும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

மழை பெய்து நீா்வரத்து வரும் வரை இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்கள் மின் மோட்டாா் மூலம் குடிநீா் எடுப்பதை தவிா்க்குமாறும், தவறும் பட்சத்தில் மின் மோட்டாா் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.