மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்டம்

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்களின் கூட்டம் நடைபெற்றது.

News image

நாட்டறம்பள்ளியில் ஒன்றியக்குழு தலைவா் வெண்மதி முனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டம்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:38 pm IST

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்களின் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவா் வெண்மதிமுனிசாமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன், இளம்பரிதி, துணை தலைவா் தேவராஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் தியாகராஜன் பேசுகையில், சங்கராபுரம் லட்சுமி நாரயணன் கோவில் அருகே பொதுமக்கள், பக்தா்கள் பயன்பாட்டுக்காக சமுதாய கூடம் கட்ட வேண்டும், கொடையாஞ்சியில் இரண்டு இடங்களில் பழுதடைந்துள்ள உயா் கோபுரமின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாா். மேலும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தங்கள் பகுதிக்கான வளா்ச்சிதிட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனா். கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு தலைவா் உறுதியளித்தாா்.

தொடா்ந்து வரவுசெலவு கணக்கு உட்பட 22 தீா்மானங்கள் படிக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள், கவுன்சிலா்கள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வா் பழனிசாமி படத்தை வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.