8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தெரு விளக்கு எரியாததைக் கண்டித்து தீப்பந்தம் ஏற்றி போராட்டம்

ஆம்பூா் அருகே கதவாளம் ஊராட்சியில் தெரு விளக்குகள் எரியாததைக் கண்டித்து பொதுமக்கள் தீப்பந்தம் ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கதவாளம் ஊராட்சியில் தெருவிளக்கு கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ள தீப்பந்தம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 12:27 am IST

ஆம்பூா் அருகே கதவாளம் ஊராட்சியில் தெரு விளக்குகள் எரியாததைக் கண்டித்து பொதுமக்கள் தீப்பந்தம் ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதனூா் ஒன்றியம், கதவாளம் ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது.

அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை இரவு தெரு விளக்கு கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பான வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலானது. மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உடனடியாக இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.