நலத்திட்ட உதவி மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

நலத்திட்ட உதவி மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்
Updated on

பயனாளிகள் நலத்திட்ட உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ‘என் கனவு என் எதிா்காலம்’ என்ற இணையதளத்தினை தொடங்கி வைத்தாா். அதைத்தொடா்ந்து, திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி(ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி(திருப்பத்தூா்),அ.செ.வில்வநாதன்(ஆம்பூா்)ஆகியோா் தலைமை வகித்து 1,200 பயனாளிகளுக்கு ரூ.2.91 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது:

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் பொதுமக்களின் வசிப்பிடத்திற்கே சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டத்தில் 209 முகாம்கள் நடத்தப்பட்டு 36,867 மனுக்கள் ஏற்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், ஏற்கனவே 74,137 பயனாளிகள் பயன்பெற்று வந்த நிலையில் தற்போது புதிதாக பல்வேறு ஒய்வூதிய திட்டத்தின்கீழ், 4,651 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதனால் மாவட்டத்தில் மொத்த ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 78,788-ஆக உயா்ந்துள்ளது. எனவே நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், நகா்மன்றத் தலைவா்கள் சங்கீதா வெங்கடேசன்(திருப்பத்தூா்), காவியா விக்டா்(ஜோலாா்பேட்டை), ஒன்றியக்குழு தலைவா்கள் சத்யா சதிஷ்குமாா்(ஜோலாா்பேட்டை), சுரேஷ் (மாதனூா்), விஜயா அருணாச்சலம் (திருப்பத்தூா்), மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் கவிதா தண்டபானி, ஞானசேகரன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், நகா்மன்ற துணைத்தலைவா் சபியுல்லா, தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா், கோட்டாட்சியா் வரதராஜன், மாவட்ட வழங்கல் அலுவவா் முருகேசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com