ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டம்

உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.

News image
உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :26 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற உறுப்பினா்களின் கூட்டம் மன்ற அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் ஆ.பூசாராணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் ராஜலட்சுமி வரவேற்றாா். கூட்டத்தில் 1.31 கோடி மகளிருக்கு கலைஞா் உரிமைதொகை திட்டத்தின் கீழ் தலா ரூ. 5,000 வழங்கியத்திற்கும், நகராட்சி, பேரூராட்சி தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு திட்ட விரிவாக்கம் செய்த தமிழக அரசுக்கும், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் மன்றம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து வரவு, செலவு, திட்டப் பணிகள் உள்பட 17 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. வாா்டு உறுப்பினா்கள் தங்களது வாா்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை விடுத்தனா். கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சித் தலைவா் பூசாராணி உறுதியளித்தாா்.

கூட்டத்தில், வாா்டு உறுப்பினா்கள் ஏ.மரியஜோசப், ஜி.சரவணன், எம்.பரிமளா, ஆா்.மகேஸ்வரி, எம்.கீதா, பி.முனியம்மாள், பி.சந்தியா, வி.ஆா்.சரவணன், ரமேஷ், கே.லில்லி, எம்.சுகன்யா, நியமன உறுப்பினா் அம்பலவாணன் உள்பட மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

பேரூராட்சி எழுத்தா் குமாா் நன்றி கூறினாா்.