கூடாரவல்லி நோன்பை முன்னிட்டு திருப்பத்தூா் பெருமாள் கோயிலில்படைக்கப்பட்ட அக்கார அடிசில்.
திருப்பத்தூர்
திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு
திருப்பத்தூா் கோட்டை பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு விமரிசையாக நடைபெற்றது.
திருப்பத்தூா் கோட்டை பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு விமரிசையாக நடைபெற்றது.
திருப்பத்தூா் கோட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை கூடாரவல்லி நோன்பை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பின்னா் அக்கார அடிசில் படைக்கப்பட்டு பக்தா்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இரவு 7 மணியளவில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளிலிருந்து பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். அதேபோல், செட்டி தெருவில் உள்ள அப்பன் ஸ்ரீசீனிவாச ராமானுஜா் கூடத்தில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், திவ்ய பிரபந்த சேவையும், திருப்பாவை பாராயணமும் நடைபெற்றது.

