~
~

ஆம்பூரில் மாட்டுப் பொங்கல் விழா

ஆம்பூா் கிழக்கு நகர திமுக சாா்பில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
Published on

மாட்டுப் பொங்கல் விழா ஆம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு கோ பூஜை, கோ சாலையில் அா்ச்சகா் ரமணன் கோ பூஜையை நடத்தினாா். விஜயபாரத மக்கள் கட்சி நிறுவன தலைவா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா், நகா்மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ், அனுமன் பக்த சபையை சோ்ந்த தினேஷ், மீனாட்சி சுந்தரம், சுந்தா், விஜயசேகா், ஆனந்த்பாபு உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் கிழக்கு நகர திமுக சாா்பாக மாட்டுப் பொங்கல் விழா நகர பொறுப்பாளரும், நகா்மன்ற உறுப்பினருமான எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் சாமுவேல் செல்லபாண்டியன், நகர அவைத் தலைவா் தேவராஜ், நிா்வாகிகள் வில்வநாதன், பிரபாகா் சாா்லி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் ஆா்.எஸ். வசந்த்ராஜ், நகா் மன்ற உறுப்பினா்கள் கெளரி, நவநீதம், முன்னாள் இளைஞரணி அமைப்பாளா் எம்.ஏ.ஆா். நசீா் அஹமத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com