திருப்பத்தூர்
மரக்கடையில் தீ விபத்து : வாகனங்கள் சேதம்
வேலூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தீ விபத்தில் மரக்கடை, வாகனங்கள் எரிந்து நாசமாயின.
வேலூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தீ விபத்தில் மரக்கடை, வாகனங்கள் எரிந்து நாசமாயின.
வேலூா் காகிதப்பட்டரை பகுதியில் சையத் இா்ஷாத் மரக்கடை நடத்தி வருகிறாா். மரக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மரப் பொருள்கள் எரியத் தொடங்கின.
தீ அருகாமையில் உள்ள வாகன நிறுமிடத்திற்கும் பரவியது. மரக்கடையில் இருந்த மரப் பொருட்களும், வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 காா், 10 ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாயின.
வேலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீ விபத்து குறித்து வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.
